எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தின் முதல் சிங்கிளான 'ராசா கண்ணு' என்ற பாடல் நேற்று யு டியூப் தளத்தில் வெளியானது.
யுகபாரதி எழுத, வடிவேலு பாடியுள்ள இந்தப் பாடல் உருக வைக்கும் ஒரு பாடலாக இருப்பதாக ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. சிறிய வேடத்தில் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் நகைச்சுவை நடிகராக உயர்ந்து, கதாநாயகனாகவும் மாறி சில படங்களில் நடித்தவர் வடிவேலு. தற்போது 'மாமன்னன்' படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்து முடித்துள்ளார். அப்படத்தின் போஸ்டர்களில் இருந்து அது ஒரு சீரியசான கதாபாத்திரம் எனத் தெரிகிறது.
1995ம் ஆண்டு வெளிவந்த 'எல்லாமே என் ராசாதான்' படத்தில் இளையராஜா இசையில் முதன் முதலில் வடிவேலு பாடிய 'எட்டணா இருந்தா எட்டூரு என் பாட்டு கேட்கும்' பாடல் சூப்பர் ஹிட்டானது. அதன் பிறகு பல இசையமைப்பாளர்கள் இசையிலும் வடிவேலு பாடியிருக்கிறார். ஏஆர் ரஹ்மான் இசையில் பாடியிருப்பது இதுவே முதல் முறை.
கடந்த 24 மணி நேரத்தில் இப்பாடல் 3 மில்லியன் பார்வைகளை யு டியுபில் நெருங்கியுள்ளது. பாடலுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளார்கள். படத்திலும் அப்பாடல் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என ரசிகர்கள் கூறியுள்ளார்கள்.