பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் தயாராகி வரும் தேவாரா என்ற படத்தில் நடித்து வருகிறார். நாயகியாக ஜான்வி கபூரும், வில்லனாக சைப் அலிகானும் நடிக்கின்றனர். இருவரும் முதன்முறையாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகின்றனர். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதை தொடர்ந்து கே.ஜி.எப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ஜூனியர் என்டிஆர். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில ஆண்டுகள் முன்பே வெளியானது.
இந்நிலையில் ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கும் என்று அதிகாரபூர்வமாக போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.