கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது மாமன்னன், சைரன், போலா சங்கர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இந்த படத்திற்காக தற்காப்பு கலைக்கான பயிற்சியில் சிம்பு ஈடுபட்டுள்ளார். படத்தில் நடிக்க நடிகர், நடிகை தேர்வு மற்றும் டெக்னீசியன் ஒப்பந்தமும் செய்து வருகின்றனர். பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவை இந்த படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அது கைகூடவில்லை. இப்போது கீர்த்தி சுரேஷ் உடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது உறுதியாகும் பட்சத்தில் சிம்பு உடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் முதல்படம் இதுவாக இருக்கும். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.