கமல் பிறந்தநாளில் தக் லைப் பட சிறப்பு வீடியோ | ஷாலினியை தொடர்ந்து மாதவனை சந்தித்த அஜித் | விஜய் பட நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா | அமரன் படத்தில் நடித்தது ஏன்? - வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | ‛தெறி' ஹிந்தி ரீ-மேக்கான ‛பேபி ஜான்' பட டீசர் வெளியானது | அமீர்கான் தயாரிப்பில் ‛அமரன்' பட இயக்குனர் | என்ஜிகே படத்தில் இருந்து சாய் பல்லவி வெளியேறாமல் தடுத்த தனுஷ் | விஜய் தேவரகொண்டா படத்தில் இணையும் ‛தி மம்மி' பட நடிகர் | குழந்தையை தாலாட்டு பாடி தூங்கவைக்கும் '96' இசையமைப்பாளர் | சாதனை விலையில் 'விஜய் 69' வெளிநாட்டு உரிமை |
தமிழ், தெலுங்கில் நடித்து வரும் கிர்த்தி ஷெட்டி தற்போது பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கிரித்தி ஷெட்டி முகத்துக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில் நெட்டிசன்கள் அவரை விமர்சனம் செய்து வந்தனர்.
இதுபற்றி கிர்த்தி கூறுகையில், “சமூக வலைதளங்களில் உள்ளவர்கள் ஏன் எதிர்மறை கருத்துக்களை பரப்புகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. சமீபத்தில் கூட நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக தகவல் பரவியது. என் முகம் 'உப்பெனா' படத்தில் எப்படி இருந்தது, இப்போது எப்படி உள்ளது என்று கூறுகிறார்கள். மேக்கப்பால் முகத்தில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்புதான். மேலும், வயது அதிகரிக்கும் போதும் உடலில் மாற்றங்கள் ஏற்படும் என்பதும் இயல்பு தான்" என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.