மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார்த்தியை கை விட்ட 'வா வாத்தியார்' | மெமரி கார்டு விவகாரத்தை விசாரணை மூலம் முடிவுக்கு கொண்டு வந்த ஸ்வேதா மேனன் | 'ஜனநாயகன்' தீர்ப்பு, அடுத்த வாரம் தான்….??? |

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களையும், பாடல்களையும் கொடுத்தவர் யுவன்ஷங்கர் ராஜா. ஆனால், டாப் நடிகர்களில் அஜித் உடன் மட்டுமே அதிகம் இணைந்திருக்கிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் யுவனின் அப்பா இளையராஜாவின் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அவர்கள் யுவனுக்கு தங்கள் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை இதுவரை கொடுக்கவில்லை. பின்னணி இசையிலும் தனி முத்திரை பதிப்பவர் யுவன்.
விஜய்யுடன் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜெகன் இயக்கத்தில் வெளிவந்த 'புதிய கீதை' படத்திற்கு மட்டுமே இசையமைத்திருக்கிறார். அதற்குப் பிறகு விஜய், யுவன் கூட்டணி எந்த ஒரு படத்திலும் இணையவில்லை. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படமான 68வது படத்தை வெங்கட்பிரபு இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வெங்கட்பிரபு இயக்கும் படங்களுக்கு யுவன்தான் எப்போதுமே இசையமைப்பாளர். 'மன்மத லீலை' படத்திற்கு மட்டும் தன் தம்பி பிரேம்ஜியை இசையமைக்க வைத்தார் வெங்கட்பிரபு.
விஜய் 68 படத்தை எஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்நிறுவனம் தயாரித்து கடைசியாக வெளிவந்த 'லவ் டுடே' படத்தின் வெற்றிக்கு யுவனின் இசையும் ஒரு காரணம். யுவன் இசையமைக்க விஜய்யும் சம்மதம் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 டிசம்பர் மாதக் கடைசியில் விஜய்யை சந்தித்த பின் அவருடன் இருந்த புகைப்படத்தைப் பதிவிட்டு, 'பயர்' எமோஜியைப் பதிவு செய்திருந்தார் யுவன். அப்போதிருந்தே இக்கூட்டணி எப்போது இணையப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். விஜய் 68ல் அது நடக்குமா ?.