ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

சரவணன் இயக்கத்தில் வெளிவந்த 'எங்கேயும் எப்போதும்' படத்தில் தமிழில் பிரபலமானவர் சர்வானந்த். தெலுங்கு நடிகரான அவர் அதற்கு முன்பு ஓரிரு தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும் 'எங்கேயும் எப்போதும்' படம் மூலம்தான் பிரபலமானார். அதற்குப் பிறகு 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை', கடந்த வருடம் வெளிவந்த 'கணம்' ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது ஸ்ரீராம் ஆதித்யா இயக்கத்தில் தெலுங்குப் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
சர்வானந்த்திற்கு கடந்த ஜனவரி மாதம் ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், கடந்த சில நாட்களாக அவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பே பிரிந்துவிட்டதாகத் தகவல் பரவியது. அதற்கு சர்வானந்த் தரப்பிலிருந்து விளக்கம் கொடுத்துள்ளார்கள். கடந்த 40 நாட்களாக அவர் நடித்து வரும் தெலுங்குப் படத்திற்காக லண்டன் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார் என்று கூறியிருக்கிறார்கள்.
இந்நிலையில் ஜுன் மாதம் 3ம் தேதி ராஜஸ்தான் தலைநகர், ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலஸில் சர்வானந்த், ரக்ஷிதா திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தெலுங்குத் திரையலகத்தைச் சேர்ந்த பல பிரபலங்கள் அதில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம்.




