'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

தெலுங்கில் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்தவர் கிரித்தி ஷெட்டி. புச்சிபாபு இயக்கத்தில் 2021ல் தெலுங்கில் வெளிவந்த 'உப்பெனா' படம்தான் அவர் அறிமுகமான படம். அந்தப் படத்தில் வில்லன் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார்.
அதன் பிறகு தெலுங்கில் அவர் நடித்து வெளிவந்த 'ஷியாம் சிங்கா ராய்' மட்டும்தான் வெற்றிப் படமாக அமைந்தது. அதன்பிறகு வந்த படங்கள் தோல்வியைத்தான் சந்தித்துள்ளன. கடந்த வருடம் தமிழ், தெலுங்கில் தயாராக வெளிவந்த 'த வாரியர்', கடந்த வாரம் வெளிவந்த 'கஸ்டடி' ஆகிய படங்களும் கிரித்தி ஷெட்டியின் தமிழ் வாய்ப்பை தோல்விக்குள்ளாக்கியது.
பாலா இயக்கத்தில், சூர்யா நடிப்பதாக இருந்த 'வணங்கான்' படத்திலும் நடித்து வந்தார். அப்படத்திலிருந்து சூர்யா விலகியதும், படத்தின் கதையை மாற்றிய இயக்குனர் பாலா, கிரித்தி ஷெட்டியையும் படத்திலிருந்து நீக்கிவிட்டார். அந்தப் படம் சூர்யா நடிக்க திட்டமிட்டபடி நடந்திருந்தால் கிரித்திக்கும் பெரிய திருப்புமுனை கிடைத்திருக்கும்.
அழகாகவும் இருந்து, தமிழ் பேசத் தெரிந்த நாயகியாகவும் இருப்பது கிரித்திக்கு பிளஸ் பாயின்ட். அவரது அடுத்த தமிழ் வாய்ப்பாவது அவருக்கு வெற்றியைத் தேடித் தரட்டும்.




