விடாமுயற்சி டிரைலர் வெளியானது ; ஆக்ஷனில் அதகளம் பண்ணும் அஜித் : பிப்., 6ல் படம் ரிலீஸ் | ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் திஷா பதானி | பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ | சைந்தவி உடன் இணைந்து பணியாற்றுவது ஏன்? - ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில் | இரும்புக்கை மாயாவி படத்தில் நடிக்கும் அமீர்கான்? | விஜய்க்கு சொன்ன மூன்று கதை : மகிழ் திருமேனி | சூப்பர் ஹீரோ கதையில் சூர்யா | ஸ்ருதிஹாசன் குரலில் வெளிவந்த டிரெயின் முன்னோட்டம் | டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 10 வருட பயணத்தை நினைவுகூர்ந்த ஆதி |
லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர், விக்ரம் படங்களில் நடித்தார் விஜய் சேதுபதி. தற்போது விஜய்யை வைத்து அவர் இயக்கி வரும் லியோ படத்திலும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் சமீபத்தில் தான் அளித்த ஒரு பேட்டியில், லியோ படத்தில் தான் நடிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி.
இந்த நிலையில் லியோ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை என்றாலும் அப்படத்தில் வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு விஜய் சேதுபதி டப்பிங் கொடுக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது சென்னையில் நடைபெற்று வரும் லியோ படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் விரைவில் ஐதராபாத் விமான நிலையம் மற்றும் ராமோஜிராவ் பிலிம் சிட்டி போன்ற இடங்களில் படமாக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.