என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பிரபல கர்நாடக சங்கீத பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ. சினிமாவிலும் நிறைய பாடல்கள் பாடி உள்ளார். குறிப்பாக வசீகரா, முதல் கனவே, ஒன்றா இரண்டா, உயிரே என் உயிரே, பார்த்த முதல் நாளே.... உள்ளிட்ட ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை தமிழில் பாடி உள்ளார். அதோடு உள்நாடு, வெளிநாடு என பல நாடுகளிலும் தொடர்ந்து அவர் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்தில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் பாம்பே ஜெயஸ்ரீ. அப்போது அவரது மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கோமா நிலைக்கு சென்றார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் மெல்ல குணமாகி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், உங்கள் அனைவரது பிரார்த்தனையால் நான் நன்றாக குணமடைந்து வருகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து பாம்பே ஜெயஸ்ரீ விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் வழக்கம்போல் சினிமாவில் பாட வேண்டும் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.