ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
இந்தியாவில் பிரியமிர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. தற்போது குஜராத் அணி மட்டும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மீதமுள்ள மூன்று இடங்களை பிடிக்க சென்னை, கோல்கட்டா, ராஜஸ்தான், பெங்களூர், மும்பை, பஞ்சாப், லக்னோ ஆகிய அணிகள் போட்டி போட்டு வருகின்றன. எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தங்களது கடைசி போட்டியை விளையாடியது. இந்த போட்டியில் கோல்கட்டா அணி வெற்றி பெற்றது. இந்த மகிழ்ச்சியில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்களான வருண் சக்ரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் உள்ளிட்ட பலர் ரஜினியின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்துள்ளார்கள். அவர்கள் ரஜினியை சந்தித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.