லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை அடுத்து தற்போது ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், தமன்னா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஜெயிலர் படத்திற்கு பின் தனுஷ் நடிக்கும் படத்தை நெல்சன் இயக்கயிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் தனுஷ், அதையடுத்து ஒரு படத்தை இயக்க இருப்பவர், அந்த படத்தை முடித்ததும் நெல்சன் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. ரஜினியின் ஜெயிலர் படம் திரைக்கு வந்த பிறகு தனுஷை வைத்து நெல்சன் இயக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளதாம்.