இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

நடிகை ஜோதிகா தமிழில் முதன்மை கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார். தற்போது புதிதாக ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். குயின்', 'சூப்பர் 30' போன்ற படங்களை இயக்கிய விகாஸ் பால் இயக்கும் புதிய படத்தில் நடிகர் அஜய் தேவ்கன் தயாரித்து, நடிக்கிறார். இதில் நடிகர் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் மும்பை, லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கிறது.
இப்போது இந்த படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் . கடந்த 1998ம் ஆண்டு வெளிவந்த 'டோலி சாஜா கே ரக்னா' என்ற இந்தி படத்தில் கடைசியாக ஜோதிகா நடித்திருந்தார். இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிந்தி சினிமாவிற்கு திரும்பியுள்ளார் ஜோதிகா .