''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
சுதீப்தோ சென் என்பவர் இயக்கத்தில் உருவான படம் ‛தி கேரளா ஸ்டோரி'. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்பட ஐந்து மொழிகளில் கடந்த ஐந்தாம் தேதி திரைக்கு வந்துள்ளது. இப்படம் வெளியாவதற்கு முன்பே வெளியிட அனுமதிக்க கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பின்னர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இப்படம் வெளியானது. அதோடு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பல மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்புடன் திரையிடப்பட்டது. ஆனால் தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஓரிரு நாட்கள் திரையிடப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது. விமர்சனங்கள், எதிர்ப்புகளை மீறி இப்படம் ரூ.100கோடிக்கும் அதிகமான வசூலை தந்துள்ளது.
தி கேரளா ஸ்டோரி படத்துக்கும், அந்த பட குழுவுக்கும் மிரட்டல்கள் வந்து கொண்டிருந்த நிலையில், அப்பட நாயகியான அடா சர்மா ஒரு விபத்தில் சிக்கியதால் அவர் மீது ஏதேனும் தாக்குதல் நடைபெற்று விட்டதோ என்கிற பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், நான் நன்றாக இருக்கிறேன். இந்த விபத்து குறித்து தகவல் பரவியதும் எனக்கு நிறைய மெசேஜ்கள் வந்தது. பெரிய விபத்து எதுவும் இல்லை. அனைவரும் என்மீது கொண்ட அக்கறைக்கு நன்றி. நானும் படக்குழுவும் நன்றாக இருக்கிறோம் என்று பதிவிட்டு பரபரப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அடா சர்மா.