2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சென்னை மற்றும் கோல்கட்டா அணிகள் மோதிய பிரியமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியை பார்ப்பதற்கு நடிகர் யோகி பாபு வந்திருந்தார். அவர் கூறுகையில், ‛‛சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட்டை பார்ப்பதற்கு இப்போதுதான் நான் முதல்முறையாக வந்திருக்கிறேன். ரசிகர்களோடு அமர்ந்து கிரிக்கெட் விளையாட்டை பார்ப்பது சந்தோஷமாக உள்ளது. குறிப்பாக, தல தோனி கடைசி இரண்டு பால் ஆடினார். அது போதும் தல தரிசனம் கிடைத்து விட்டது என்று கூறியுள்ள யோகி பாபு, அதையடுத்து தன்னை சூழ்ந்து கொண்ட ரசிகர்களின் செல்பிக்கு போஸ் கொடுத்து அவர்களை மகிழ்ச்சி படுத்திவிட்டு அங்கிருந்து சென்றார் .