ரஜினி என்ற ஒரு பெயருக்காகதான் நடிக்கிறேன் : கன்னட நடிகர் உபேந்திரா | வெற்றி தீபம்... ஜனநாயகத்தின் ஒளி... : அரசியல் படமா... ‛விஜய் 69' | திருமண சடங்கான மெஹந்தி புகைப்படங்களை வெளியிட்ட மேகா ஆகாஷ் | ‛வேட்டையன்' படம் பற்றி மஞ்சு வாரியர் என்ன சொல்கிறார் | அரசியல் பேசும் சசிக்குமாரின் நந்தன் : டிரைலர் வெளியானது | மீண்டும் ஜோடி சேரும் விஜய், பூஜா ஹெக்டே | என் தந்தையே எனது மிகப்பெரிய விமர்சகர் : பாடகி டூ நடிகை த்வானி பனுஷாலி பேட்டி | ஸ்பெயின் பறக்கும் ‛குட் பேட் அக்லி' படக்குழு | மீண்டும் தனுஷ் இயக்கத்தில் ராஜ் கிரண் | பிரதர் படத்தின் டப்பிங் பணியை முடித்த ஜெயம் ரவி |
பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் காஜல் அகர்வால். 'பொம்மலாட்டம்' படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு பழனி, மோதி விளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா, மாரி, பாயும்புலி, விவேகம், மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஆனார். கடைசியாக தமிழில் அவர் நடிப்பில் 'கோஷ்டி' படம் வெளியானது. தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
காஜல் அகர்வால் 2020ல் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் காஜல் அகர்வால் சொந்தமாக 'காஜல் பை காஜல்' என்ற பெயரில் அழகு சாதனப்பொருள் நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.
காஜல் கூறுகையில், “என் கணவர் உதவி இல்லாமல் இந்த தொழிலை என்னால் தொடங்கி இருக்க முடியாது. அவர்தான் என்னை ஊக்கப்படுத்தினார். எப்போதும் ஒரே வருமானத்தை நம்பி இருக்க கூடாது என்று அவர்தான் அடிக்கடி சொல்வார். அழகு சாதன பொருட்களில் முக்கியமானது கண் அழகு சாதனங்கள் தான். அவை பாதுகாப்பானதாக இல்லை என்றால் பல பிரச்னைகள் ஏற்படும். இதனால் பாதுகாப்பான கண் அழகு சாதன பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இதனை தொடங்கி உள்ளேன்” என்று காஜல் அகர்வால் தெரிவித்து உள்ளார்.