''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
சமீபத்தில் இயக்குனர் டி.பி.கஜேந்திரன், நடிகர்கள் மயில்சாமி, மனோபாலா ஆகியோர் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். மூவருமே நகைச்சுவை கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் சார்பில் சென்னை தி.நகரில் உள்ள தியாகராயர் அரங்கில் இரங்கல் கூட்டம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளருமான கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன், தயாரிப்பாளர் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன், இயக்குனர் சங்க செயலாளர் ஆர்.வி.உதயகுமார், நடப்பு தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, நடிகர்கள் டெல்லி கணேஷ், மன்சூரலிகான், பசுபதி, ராஜேஷ், போஸ் வெங்கட், அஜய் ரத்னம், பொன்வண்ணன், உதயா, சரவணன், லியாகத்தலிகான், விக்னேஷ், சிம்ரன், வையாபுரி, நடிகைகள் தேவயானி, ரோகினி, சச்சு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கார்த்தி தவிர முன்னணி நடிகர், நடிகைகள் யாரும் பங்கேற்கவில்லை.
நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி “மறைந்த மூவரும் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக இருந்தார்கள். மற்றவர்களுக்கு உதவுவதில் முக்கியமானவர்களாக இருந்தார்கள். குறிப்பாக மயில்சாமி தானத்திற்கு பிறகுதான் தனக்கு என்று கொடை வள்ளலாக வாழ்ந்தார். மரணம் இயற்கையானதுதான் ஆனால் அது இத்தனை சீக்கிரம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும்” என்றார்.