''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
விஜய் ஆண்டனி தயாரித்து, இயக்கி, நடித்துள்ள பிச்சைக்காரன் 2 படம் வருகிற 19ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தின் பாடல் காட்சி மலேசியாவில் உள்ள லங்கா தீவு கடலில் படமானபோது படகு மோதி விபத்து ஏற்பட்டதில் விஜய் ஆண்டனி கடலில் விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை காவியா தாப்பர் காப்பாற்றினார். இதனை விஜய் ஆண்டனியே தெரிவித்திருந்தார்.
விஜய் ஆண்டனியை காப்பாற்றியது எப்படி என்பது குறித்து காவ்யா தாப்பர் கூறியிருப்பதாவது: பாடல் காட்சிக்காக நானும் விஜய் ஆண்டனியும் கடலில் செல்லும் மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்தோம். அதனை ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் இன்னொரு படகில் இருந்து படமாக்கினர். திட்டமிட்டபடி நாங்கள் மூன்று சுற்றுகள் அவர்களின் படகை சுற்ற வேண்டும். முதல் சுற்றை வெற்றிகரமாக முடித்தோம். இரண்டாவது சுற்றின் போது எங்களின் கடல் பைக் அவர்களின் படகின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் படகை ஓட்டிக் சென்ற விஜய் ஆண்டனி கடலுக்குள் தூக்கி வீசப்பட்டார். அவர் கடலுக்குள் மூழ்கினார். அவருக்கு நீச்சல் தெரியாது என்பது எனக்கு முன்பே தெரியும், அதனால் நான் கடலுக்குள் குதித்து அவரை காப்பாற்ற நீந்தி சென்றேன். அதன் பிறகு ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாசின் உதவியாளரும் என்னோடு கடலில் குதித்து இணைந்து கொண்டார். நாங்கள் விஜய் ஆண்டனியை மீட்டு கொண்டிருந்தபோது மற்றவர்களும் வந்து விட்டனர்.
சுயநினைவு இல்லாமல் இருந்து அவரை மருத்துவமனையில் சேர்த்தோம். அப்போது எனக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது. அதில் எனது மூக்கில் எலும்பு முறியும், நெற்றியில் உள் காயமும் இருந்தது. அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டது. கடலில் விழுந்த நான் மரணத்தின் எல்லை வரை சென்று திரும்பினேன். இந்த சம்பவத்தை என்னால் மறக்க முடியவில்லை. விபத்தில் ஏற்பட்ட உள் காயம் இன்னும் என் முகத்தில் இருக்கிறது. என்றார்.