லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் | தமிழ் ஹீரோ துன்புறுத்தினாரா...? - அப்படி சொல்லவே இல்லை என்கிறார் நித்யா மேனன் | பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா? | மீண்டும் ராஷ்மிகா உடன் இணையும் விஜய் தேவரகொண்டா | பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன் | ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது | 5 மொழிகளில் தயாராகும் 'பர்மா' | இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் ஏப்ரல் 28ல் வெளிவந்த படம் 'பொன்னியின் செல்வன் 2'. இரண்டு வாரத்திற்குள்ளாக 300 கோடி வசூலைக் கடந்த படமாக அமைந்தது. தற்போது இப்படம் 3வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் 10 படங்கள் வெளிவந்தாலும், 3வது வாரத்திலும் வார இறுதி நாட்களில் பல தியேட்டர்களில் இப்படம் 70 சதவீதத்திற்கும் மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் முன்பதிவு நன்றாக உள்ளது.
முதல் பாகத்துடன் ஒப்பிடும் போது இப்படம் கொஞ்சமாக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும் வசூலில் ஏமாற்றத்தைத் தரவில்லை. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் படத்திற்கு சிறப்பான வரவேற்பு இருப்பதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரம் வரை இப்படம் தாக்குப்பிடித்து ஓடும் என்கிறார்கள். 400 கோடி வசூலைக் கடப்பது உறுதி, 500 கோடி வசூலைக் கடக்குமா என்பது இனிமேல்தான் தெரியும்.