தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.83 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' |
ஒரே பெயர் அல்லது ஏறக்குறைய ஒரே உச்சரிப்பில் தற்போது இரண்டு, மூன்று நடிகைகள் இருக்கிறார்கள். நல்ல வேளையாக அவர்களது துணைப் பெயராக வேறு பெயர்கள் இருப்பதால் குழப்பம் தவிர்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் இதற்கு முன்பும் இப்படி சில பெயர்கள் ஏறக்குறைய ஒன்றாக இருந்து ரசிகர்களைக் குழப்பின. இப்போது 'கீர்த்தி, கிரித்தி' என சில பெயர்கள் குழப்பி வருகின்றன.
தமிழ், தெலுங்கில் ஏற்கெனவே முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். 'த வாரியர்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி நேற்று வெளியான 'கஸ்டடி' படத்திலும் நடித்துள்ளவர் கிரித்தி ஷெட்டி. சில தினங்களுக்கு முன்பு வெளியான 'ஆதிபுருஷ்' படத்தில் நடித்துள்ளவர் பாலிவுட் நடிகையான கிரித்தி சனோன்.
இவர்களது பெயரை கீர்த்தி என்றும் கிரித்தி என்றும் கிர்த்தி என்றும் அவரவர் அவர்களது வசதிக்கு ஏற்ப எழுதிக் கொள்கிறார்கள். மேலே குறிப்பிட்ட மூவருமே தற்போது பிரபலமாக இருப்பவர்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.