பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
பத்து தல படத்தை அடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் சிம்பு. இது அவரது 48வது படமாகும். இந்த படத்தில் கமல்ஹாசனும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், ரஜினிக்காக தான் உருவாக்கிய கதையில் சிம்புவை இயக்கப் போகும் தேசிங்கு பெரியசாமி, தற்போது இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்த நிலையில் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதோடு, ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே நடித்த பதான் படம் வெற்றி பெற்றதை அடுத்து அவரது சம்பளம் பல கோடிக்கு உயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சிம்புவை பொறுத்தவரை 20 கோடி வரை தான் சம்பளம் வாங்கி வருகிறார். அந்த வகையில் இந்த படத்தில் தீபிகா படுகோனே சிம்புவை விட அதிகப்படியான சம்பளத்துக்கு ஒப்பந்தமாவார் என்றும் கூறப்படுகிறது.