லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் | தமிழ் ஹீரோ துன்புறுத்தினாரா...? - அப்படி சொல்லவே இல்லை என்கிறார் நித்யா மேனன் | பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா? | மீண்டும் ராஷ்மிகா உடன் இணையும் விஜய் தேவரகொண்டா | பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன் | ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது | 5 மொழிகளில் தயாராகும் 'பர்மா' | இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் |
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ள த்ரிஷா, அடுத்தபடியாக விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. லியோ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்ற போது அவருடன் இணைந்து நடித்து வந்த த்ரிஷா, தற்போது சென்னையில் நடைபெற்று வரும் லியோ படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகிறார்.
இங்கு விஜய் சம்பந்தப்பட்ட ஆக்சன் காட்சிகள் மட்டுமின்றி திரிஷாவுடன் அவர் இணைந்து நடிக்கும் ரொமான்ஸ் காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக அவர் மீண்டும் லியோ படப்பிடிப்பு தளத்துக்கு சென்றபோது அவரது நாற்பதாவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்கள். சமீபத்தில் திரிஷா தனது பிறந்தநாளை கொண்டாடிய போது விஜய்யும் அவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த லியோ படக்குழு, தற்போது திரிஷாவுடன் இணைந்து கேக் வெட்டி அவரது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள்.