ஹிந்திக்கு செல்லும் வேட்டையன் இயக்குனர் ஞானவேல் : என்ன கதை தெரியுமா? | ஆந்திரா, தெலங்கானா வெள்ளத்திற்கு சிம்பு நிதியுதவி | மலையாளத்திலிருந்து இறக்குமதியான 'மனசிலாயோ, தாவூதி' பாடல்கள்... - அனிருத் சம்பவம் | இறுதிக் கட்டத்தை நெருங்கிய தக் லைப் | நஷ்டத்தை சரி செய்ய ரவி தேஜா எடுத்த அதிரடி முடிவு | செப்.,21ல் வெளியாகும் ‛பிரதர்' பட இசை, டீசர் வெளியீட்டு விழா | விஜய் படத்தை தொடர்ந்து சூர்யா படத்திலும் பிரசாந்த்? | பிறந்தநாளில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்த ஜெயம் ரவி | பிளாஷ்பேக் : பாடகி எஸ் ஜானகியை அழவைத்த இளையராஜாவின் பாடல் | அந்நியன் 2ம் பாகத்தை எதிர்பார்த்த விக்ரம் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கிர்த்தி ஷெட்டி நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள 'கஸ்டடி' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற உள்ளது. இப்படத்திற்கு இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளார்கள்.
இதற்கு முன்பு அவர்கள் இப்படி இணைந்து இசையமைத்த 'மாமனிதன்' படத்தின் நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் வரவில்லை. அப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி, தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதே அதற்குக் காரணமாக அமைந்தது.
ஆனால், வெங்கட் பிரபு, இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் மகன். வெங்கட்பிரபு படத்திற்காக இளையராஜா முதல் முறை இசையமைத்துள்ளார். எனவே, இன்று இளையராஜாவும், யுவனும் கண்டிப்பாகக் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
வெற்றிமாறன் இயக்கிய 'விடுதலை' பட நிகழ்ச்சிக்கும் இளையராஜா வந்து சிறப்பித்து வாழ்த்திவிட்டுச் சென்றார். அது போல இன்றும் வந்து சிறப்பிப்பார் என இளையராஜா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.