நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

வெற்றிமாறன் இயக்கிய வட சென்னை படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கி உள்ள பிசாசு 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. அதன் பிறகு மாளிகை, கா உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். திரையுலகில் நடிகை, பாடகி என பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஆண்ட்ரியா, இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.
தற்போது அவர் பூடான் நாட்டுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஆண்ட்ரியா, ஒரு பதிவும் போட்டிருக்கிறார். அந்த பதிவில், பூடான் நாட்டில் அனுபவிக்க மூன்று விஷயங்களை உள்ளன. இமயமலையின் ராஜ்ஜியத்தையும் அதன் நிலப்பரப்புகளையும் கண்டுகளிக்கலாம். இங்கு நடை பயணத்தின் மூலம் சுத்தமான காற்றை அனுபவிக்க முடியும். பௌத்த பூமியான இந்த பூடானில் ஆன்மிகத்தை உணர முடிகிறது. இப்படி ஒரு மறக்க முடியாத பயணம் கிடைத்தமைக்கு நன்றி என அவர் பதிவிட்டுள்ளார்.