பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் |

சினிமா உலகில் 100 கோடி வசூல் என்பதுதான் சில வருடங்களுக்கு முன்பு வரை ஒரு 'டார்கெட்' ஆக இருந்தது. அது இப்போது 1000 கோடி வசூல் என மாறிவிட்டது. 'பாகுபலி 2, டங்கல், கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் அப்படி 1000 கோடி வசூலித்ததே அதற்குக் காரணம்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் இன்னும் 600 கோடி வசூலைத் தாண்ட முடியாமல் உள்ளது. அப்படி 600 கோடி வசூலைக் கடந்த படமாக ஐந்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்த '2.0' படம் முதல் சாதனையைப் படைத்தது.
கடந்த வருடம் வெளிவந்த 'பொன்னியின் செல்வன் 1' 500 கோடி வசூலையும், 'விக்ரம்' படம் 400 கோடி வசூலையும் கடந்தது. 300 கோடி வசூலைக் கடந்த படங்களாக 'பிகில், வாரிசு' ஆகிய படங்கள் உள்ளன. 'பொன்னியின் செல்வன் 2' படமும் தற்போது 300 கோடி வசூலைக் கடந்த படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. இவற்றில் சில படங்களின் வசூல்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவை. சில பாக்ஸ் ஆபீஸ்ட் வட்டாரத் தகவல் மட்டுமே.
'பொன்னியின் செல்வன் 2' கடந்த வருடம் வெளிவந்த முதல் பாகத்தின் வசூலான 500 கோடியைக் கடக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.