டைம் ஸ்கொயரில் வெளியிடப்பட்ட எம்புரான் பட டிரைலர் | மோகன்லால் மகனை இயக்கும் பிரம்மயுகம் இயக்குனர் | ரூ.125 கோடி வரி கட்டிய அமிதாப்பச்சன் | விஜய் சேதுபதியை இயக்கப் போகும் பூரி ஜெகன்னாத்? | ரஜினி சந்திப்பு பற்றி பிருத்விராஜ் நெகிழ்ச்சி | 700 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'அரபிக் குத்து' | அனுஷ்கா, விக்ரம் பிரபு நடிக்கும் 'காட்டி' தள்ளிப் போகிறதா ? | நம்ம ஊரு கலரே மாநிறம் தானே : ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த பதில் | குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் சிம்பு? | வள்ளியின் வேலன் தொடரில் கவர்னர் வேடத்தில் இனியா |
சின்னத்திரை சீரியல் நடிகரான அசீம், பிக்பாஸ் ஆறாவது சீசனில் டைட்டில் பட்டம் வென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின் எந்தவொரு சீரியலிலும் கமிட்டாகாத அசீம், தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். சிவாகார்த்திகேயனை வைத்து 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' ஆகிய ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் பொன்ராம், அசீமை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். தற்போது பொன்ராமும் அசீமும் ஸ்டோரி டிஸ்கசன் மற்றும் லொக்கேஷன் பார்ப்பதற்காக ராஜஸ்தான் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் சேர்ந்து நின்று எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் கேரியரில் முக்கிய பங்காற்றிய பொன்ராம் தற்போது அசீமுடன் இணைந்திருப்பதால் அசீமுக்கும் வெள்ளித்திரையில் நல்ல ஒப்பனிங் கிடைக்குமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.