10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சீமராஜா, எம்ஜி. ஆர், டி.எஸ்.பி போன்ற படங்கள் தோல்வியை தழுவியன. இதனால் இவருக்கு கால்ஷீட் தர எந்த முன்னனி ஹீரோக்களும் முன்வரவில்லை.
இந்த நிலையில் பொன்ராம் அடுத்து இயக்கும் புதிய படத்தில் சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்கிறார். இதில் மற்றொரு முக்கிய கதாப்பாத்திரத்தில் சரத்குமார் நடிக்கின்றார். சரத்குமார் மறைந்த நடிகர் விஜயகாந்துடன், 'புலன் விசாரணை', 'கேப்டன் பிரபாகரன்', 'சந்தன காற்று' போன்ற படங்களில் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தற்போது இதன் கதை விவாத பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது. நேற்றுமுன்தினம் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தை பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.