பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் | ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார் | உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல் | ஜனநாயகன் ஆடியோ விழாவில் அரசியல் பேசக்கூடாது : மலேசிய அரசு தடையாம் | ஜனவரி 23-ல் நெட் பிளிக்ஸில் தேரே இஸ்க் மே | ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? |

‛‛வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட் 2 சினிமா எனது கனவுத்திட்டம்'' என சினிமா இயக்குனர் பொன்ராம் தெரிவித்தார்.
தேனியில் உள்ள சினிமா தியேட்டரில் ரசிகர்களுடன் தான் எழுதி இயக்கிய, ‛கொம்புசீவி' படத்தின் கதாநாயகன் நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியனுடன் படம் பார்த்து விட்டு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை கட்டும் போது 15க்கும் மேற்பட்ட கிராமங்களையும் சேர்த்துதான் அணை கட்டுமானம் நடந்தது. அதனால் அக்கிராமங்களில் வாழ்ந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மாற்றுத் தொழில்களுக்காக இடம் பெயர்ந்தார்கள் என்பது குறித்த கதைதான் இந்த திரைப்படம் பேசியிருக்கிறது.
1996ல் நடந்த சம்பவம், அன்றிருந்த நிலை இன்றில்லை. அணை உருவாவதற்காக இடத்தை வழங்கியவர்கள் சந்தோஷமாக இருக்கின்றனர். ஏனெனில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உட்பட 5 மாவட்டங்களுக்கு இந்த அணையில் இருந்து தண்ணீர் செல்வதால் அந்த மகிழ்ச்சி அவர்களிடம் உண்டு. ஆனால் அணைக்கு அருகில் உள்ள சக்கரைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இன்றும் தண்ணீர் பிரச்னை உள்ளது என கேள்விப்படுகிறேன். அதை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடுத்த படத்திற்கான கதை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன். அத்திரைப்படம் காமெடி, காதல் கலந்த கலவையாக இருக்கும். ரசிகர்கள், பெண்கள், ‛வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட் 2 எடுப்பீர்களா'என கேட்கின்றனர். அத்திரைப்படம் எனது கனவுத் திட்டமாகும். கட்டாயமாக எடுப்பேன். அன்று அந்தப்படத்தில் நடித்த நடிகர்களின் வளர்ச்சி இன்று, மிக உயரமாக இருக்கிறது. அவர்கள் தற்போதைய கதாபாத்திரங்களுக்கு பொருந்துவார்களா என பார்க்க வேண்டும். இளம் தலைமுறையினர் புது முகங்களாக அதிக திறமைகளுடன் வருகின்றனர். அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும், என்றார்.