'கருப்பு' ரிலீஸ் - அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆர்ஜே பாலாஜி | 'தாய் கிழவி' ரிலீஸ் ஒத்தி வைப்பு ஏன் ? | பிளாஷ்பேக்: முரணான தலைப்பு, முத்தான வெற்றி, முயற்சித்து சாதித்த இயக்குநர் கே பாக்யராஜ் | 'சூர்யா- 46' படத்தின் டைட்டில், ரிலீஸ் குறித்த தகவல் வெளியானது! | பிளாஷ்பேக்: வாள்வீச்சு நாயகன் ரஞ்சனின் வெள்ளித்திரை வரவுக்கு வித்திட்ட “ரிஷ்யசிருங்கர்” | கவர்ச்சி மூலம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்து இழுத்த கயாடு லோஹர்! | 'வாரணாசி' படப்பிடிப்பை ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ள ராஜமவுலி! | 'வித் லவ்' ஹீரோவை பாராட்டிய விஜய் தேவரகொண்டா | குடியிருந்த கோயில், அண்ணாமலை, சிங்கம் 3 - ஞாயிறு திரைப்படங்கள் | காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு |

தமிழ் திரையுலகம் மிஸ் செய்த அழகு செர்ரி பழமான ஷெரின். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து தற்போது ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 4லும் கலந்து கொண்டு கலக்கி வந்தார். இருப்பினும் கடந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் ரவுண்டில் ஷெரின் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு குட் பை சொன்ன கையோடு ஷெரின், தனது பிறந்தநாளை கொண்டாட கோவாவுக்கு உல்லாசமாக சுற்றுலா சென்றுவிட்டார். பிறந்தநாளை ஜாலியாக கொண்டாடியுள்ள ஷெரின் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை குவித்து வரும் ரசிகர்கள் ஷெரினுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.