சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு | நிஜ வாழ்க்கையில் நடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை! : சொல்கிறார் பார்வதி | நாகசைதன்யா 24வது படத்தில் மீனாட்சி சவுத்ரி முதல் பார்வை வெளியீடு | மீண்டும் ஒரு அதிரடி, மாஸ் என்டர்டெயின் படம் : விஷால் | ஜாய் கிரிசில்டா உடன் திருமணம், குழந்தை : ஒப்புக் கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ் | 2025... 10 மாதங்கள், 222 படங்கள் : வெற்றிப் படங்கள் 12 மட்டுமே… | சாமியாரான பாலிவுட் நடிகை |

2023ம் ஆண்டில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் நடிக்கும் படங்கள் இனி வரும் நாட்களில் வெளியாக உள்ளது. அனேகமாக, அஜித் நடிக்கும் படம் மட்டும் வராமல் இருக்க வாய்ப்புள்ளது. அவரது 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு இனிமேல்தான் ஆரம்பமாக வேண்டும். அடுத்த ஏழு மாதங்களில் படத்தை முடித்து வெளியிடுவது சிரமம்தான். இருப்பினும் அவரது படத்தைத் தவிர மற்ற நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளது.
ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 'கோலமாவு கோகிலா, டாக்டர்' படங்களை இயக்கிய நெல்சன் முதல் முறையாக ரஜினி நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப், சுனில், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
விஜய் நடித்து வரும் 'லியோ' படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என்று படத்திற்கான தலைப்பை அறிவித்த முன்னோட்ட வீடியோவிலேயே அறிவித்துவிட்டார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடத்தில் வெளியாக உள்ள இப்படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணி 'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு மீண்டும் இணைகிறது. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், மேத்யூ தாமஸ், ப்ரியா ஆனந்த் என பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். 
சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'மாவீரன்' படம் ஆகஸ்ட் 11ல் வெளிவரும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படம் ஆகஸ்ட் 10ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டபின் 'மாவீரன்' படத்தின் வெளியீட்டை மாற்றியமைத்து ஜுலை 14 வெளியாகும் என்று அறிவித்தார்கள். யோகிபாபு நடித்த 'மண்டேலா' படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கும் இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மிஷ்கின், சரிதா, சுனில், யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். 
சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள மற்றொரு படமான 'அயலான்' படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராம்குமார் இயக்கித்தில் ஏஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். சில தடைகள், தாமதங்கள் என சிக்கலை சந்தித்த இப்படத்தின் அறிவிப்புத் தேதி வந்தது மகிழ்ச்சிதான். இந்த வருட தீபாவளி தினமான நவம்பர் 12 வெளியாகுமா அல்லது சில நாட்கள் முன்பாக வெளியாகுமா என்பதை அவர்கள் சரியான தேதியுடன் அறிவிக்கும் போது தெரிய வரும்.
இவை தவிர மற்ற ஹீரோக்களின் படங்கள் பற்றிய வெளியீட்டு அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.