ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்த நடிகை சம்யுக்தா, சில மாதங்களுக்கு முன்பு வெளியான வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அந்த படத்தை தொடர்ந்து கடந்த வாரம் தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான விருபாக்ஷா என்கிற படமும் வெற்றி பெற்றுள்ளது. வாத்தி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட போது சம்யுக்தா மேனன் என்கிற தனது பெயரிலிருந்து மேனன் என்கிற சாதி பெயரை நீக்கி விட்டதாகவும் தன்னை சம்யுக்தா என்றே இனிமேல் அழைக்கலாம் என்றும் ஒரு அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டார்.
ஆனால் அதே சமயம் வாத்தி பட ரிலீஸ் சமயத்திலேயே மலையாளத்தில் சம்யுக்தா நடித்த பூமராங் என்கிற திரைப்படம் வெளியானது. ஆனால் அந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அவர் மறுத்துவிட்டதாக படக்குழுவினர் அவர் மீது குற்றம் சாட்டி இருந்தனர். இந்த நிலையில் விருபாக்ஷா படம் மலையாளத்தில் வெளியாவதை முன்னிட்டு கேரளாவில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் சம்யுக்தா.
அப்போது பேசிய அவர், “எனக்கு மேனன் என்கிற சாதி பெயரை சேர்த்துக் கொள்வதில் உடன்பாடு இல்லை என்பதால் தான் அதை நீக்கினேன். ஆனால் அந்த சமயத்தில் என்னுடன் பூமராங் படத்தில் ஜோடியாக நடித்திருந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ இதுபற்றி அப்போது கூறும்போது மேனன், நாயர் என எந்த சாதி பெயரை வைத்தாலும் சரி நீக்கினாலும் சரி.. நீங்கள் பார்க்கும் வேலையில் சின்சியராக இருக்க வேண்டும் என கருத்து கூறியது என்னை வேதனைப்படுத்தியது.
நான் மேனன் என்கிற பெயரை நீக்கியதால் எந்த மாற்றமும் நடந்து விடவில்லை. இப்போதும் கூட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போதும் என்னை சம்யுக்தா மேனன் என்று தான் பலரும் அழைக்கின்றனர்” என்று கூறி தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார் சம்யுக்தா.