நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

2023ம் ஆண்டில் அதிக வசூலைப் பெறும் படங்களில் ஒன்றாக 'பொன்னியின் செல்வன் 2' இருக்கப் போகிறது என்பது உறுதி. அதே சமயம் இனி வரப் போகும் சில பெரிய படங்கள் செய்யப் போகும் வசூலை விடவும் அதிக வசூலைப் பெற்று முதலிடத்தில் நீடிக்கப் போகிறதா என்பதே இப்போதைய கேள்வி.
நான்கு நாள் வசூலிலேயே 200 கோடி வசூலைக் கடந்த 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் வசூல் தற்போது அஜித் நடித்து வெளிவந்த 'துணிவு' படத்தின் வசூலை முறியடித்துவிட்டது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்து இந்த ஆண்டில் இதுவரையில் வெளிவந்த படங்களில் அதிக வசூலைப் பெற்று முதலிடத்தில் இருக்கும் விஜய்யின் 'வாரிசு' பட வசூலை மிஞ்ச வேண்டும். அந்த 300 கோடி வசூலை இந்த வார இறுதிக்குள் 'பொன்னியின் செல்வன் 2' கடந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இதன் மூலம் தென்னிந்திய அளவில் அதிக வசூலைக் குவித்த படங்களில் இப்படம் முதலிடத்தை நோக்கி முன்னேறும். இந்த ஆண்டில் இதற்கடுத்து வர உள்ள படங்களில் ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர்' படம்தான் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம். அந்தப் படம் வசூலிக்கப் போவதை விடவும் அதிக வசூலைப் பெற்று 'பொன்னியின் செல்வன் 2' உச்சத்திற்கு செல்லுமா என்பது இனி வரும் நாட்களில்தான் தெரியும்.