ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
2023ம் ஆண்டின் தமிழ்ப் புத்தாண்டு கடந்த வெள்ளியன்று கொண்டாடி முடிக்கப்பட்டது. அதற்கும் பல புதிய படங்கள் வருவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு புத்தாண்டில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவராமல் அடுத்த கட்ட நடிகர்களின் படங்கள் வெளிவந்தது.
'இரண்டில் ஒன்று பார்த்துவிடு, ரிப்பப்பரி, ருத்ரன், சொப்பன சுந்தரி, திருவின் குரல்' ஆகிய படங்கள் வெளிவந்தன. கடந்த மூன்று நாட்களாக விடுமுறை தினம் என்பதால் ஏதோ சொற்ப டிக்கெட்டுகளுடன் இந்தப் படங்கள் கொஞ்சமாவது வசூலைப் பெற்றன.
ஆனால், இன்று வேலை நாள் என்பதால் படத்திற்கான முன்பதிவு மிக மிக மோசமாக உள்ளது. கோடை விடுமுறை ஏறக்குறைய ஆரம்பமாகிவிட்ட நிலையில் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வரத் தயாராக இல்லை என்பதை இது காட்டுகிறது. போன வாரம் வெளியான படங்களுக்கு இன்றைய காட்சிகள் முழுவதிலும் ஒரு வரிசை டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தால் அது ஆச்சரியம்.
மற்ற படங்களாவது பரவாயில்லை, சமந்தா நடித்து வெளிவந்த 'சாகுந்தலம்' டப்பிங் படத்தைப் பல தியேட்டர்களில் தூக்கிவிட்டார்கள். அப்படத்திற்காக படக்குழு தமிழில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்தவில்லை. எனவே, படம் வந்ததே பலருக்கும் தெரியவில்லை.
இந்த வாரம் ஏப்ரல் 21ம் தேதியன்றும் சில புதிய படங்கள் வர உள்ளது. அதற்கு ரசிகர்கள் வருவார்களா என்பதும் தெரியவில்லை. அதற்கடுத்த வாரம் 'பொன்னியின் செல்வன் 2' படம் வருவதால் தியேட்டர்கள் பக்கம் ரசிகர்கள் வர வாய்ப்புள்ளது என்று நம்பிக் கொண்டிருக்கிறது தியேட்டர் வட்டாரம்.