'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ரீமேக் படங்கள் பல தமிழ் நடிகர்களுக்கு முக்கியமான திருப்புமுனையைத் தந்துள்ளது. தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என அழைக்கப்படும் ரஜினிகாந்த்திற்கு 1980ல் வெளிவந்த 'பில்லா' படம்தான் முழுமையான ஆக்ஷன் ஹீரோ அந்தந்தைப் பெற்றுத் தந்தது. அப்படம் 1978ல் அமிதாப், ஜீனத் அமன் நடித்து வெளிவந்த 'டான்' ஹிந்திப் படத்தின் ரீமேக்.
ரஜினிக்கு 'பில்லா' எப்படி திருப்பம் தந்ததோ, அதே போன்றதொரு திருப்பத்தை விஜய்க்கு தந்த படம் 'கில்லி'. 2004ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி வெளியான அப்படத்திற்கு இன்று வயது 20. தற்போது வெளிவந்துள்ள 'சாகுந்தலம்' தெலுங்குப் படத்தை இயக்கிய குணசேகர் இயக்கத்தில் மகேஷ்பாபு, பூமிகா நடித்து 2003ல் வெளிவந்த படமான 'ஒக்கடு' படத்தின் தமிழ் ரீமேக் தான் 'கில்லி'.
விஜய்யின் காமெடி, காதல், ஆக்ஷன் ஆகியவையும், த்ரிஷாவின் அழகான அப்பாவித் தனமும், பிரகாஷ்ராஜின் அதிரடியான வில்லத்தனமும், வித்யாசாகரின் இசையில் 'அப்படிப் போடு, போடு' என ஆட்டம் போட வைத்த பாடல்களும் படத்தை சூப்பர் ஹிட்டாக்கின. ஒரு ரீமேக் படம் என்று சொல்ல முடியாது அப்படியே தமிழுக்குத் தகுந்தபடி தரமாக மாற்றி படத்தை இயக்கியிருந்தார் தரணி.
விஜய் நடித்து எத்தனை ஆக்ஷன் படங்கள் வந்தாலும் 'கில்லி' படத்தில் இருந்த அந்த 'பயர்' வேறு எந்தப் படத்திலும் இல்லை என்பது உண்மை. எப்போது டிவியில் அந்தப் படம் ஒளிபரப்பானாலும் அதைப் பார்த்து ரசிக்கவென்றே ஒரு கூட்டம் இப்போதும் உள்ளது.