2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

யதார்த்தமான படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் விதார்த். தற்போது அறிமுக இயக்குனர் மணிமாறன் நடராசன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக மிஸ் பெமினா பட்டம் வென்ற ரோஷினி பிரகாஷ் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்ட படபிடிப்பிற்கு படக்குழு தயாராகி வருகின்றனர். ஜிப்ரான் இசை அமைக்கிறார். கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். எம். ராகேஷ் பாபு தயாரிக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்திற்கு 'வைப்பர்' என பெயரிட்டு அதற்கான டை்டில் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். “கண்ணாடி விரியன் பாம்பின் தன்மையையும், பண்பையும் கொண்டவர் தான் கதையின் நாயகன் என்பதால் வைப்பர் என திரைப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது” என்கிறார் இயக்குநர் மணிமாறன் நடராசன்.