ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை. கடந்த 2021ம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளிவந்து வரவேற்பைப் பெற்றது. பசுபதி, துசரா விஜயன், கலையரசன், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். வட சென்னையில் பிரபலமாக திகழ்ந்த குத்தச்சண்டையை மையமாக வைத்து இந்தப்படம் வெளிவந்தது. தற்போது இதன் அடுத்த பாகமும் உருவாக உள்ளது. இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்று உலகளவில் புகழ் பெற்ற மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு சார்பட்டா பரம்பரை படம் தேர்வாகியுள்ளது. தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.