அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் |

கடந்த 2013ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக ஆன திரைப்படம் சூது கவ்வும். இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இதில் முதல் பாகத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா,சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கினார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் சூது கவ்வும் 2ம் பாகத்தை உருவாக்க தயாரிப்பாளர் சி.வி.குமார் முடிவு செய்துள்ளார். எம்.எஸ்.அர்ஜுன் இயக்கவுள்ளார். இவர் இயக்கிய முதல் படம் யங் மங் சங் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கதாநாயகனாக மிர்ச்சி சிவா நடிக்கவுள்ளார். சத்யராஜ், கருணாகரன், ராதாரவி, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். விஜய் சேதுபதி கேமியோ ரோலில் நடிப்பார் என கூறுகின்றனர். படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 17 அன்று துவங்குகிறது.