ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்களை விட அதிக வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் 'பத்லாபூர்' என்ற படம் வரைக்கும் நான் கிராமத்து பெண்ணாகத்தான் நடிக்க முடியும் என கூறினார்கள். 'பத்லாபூர்' படத்திற்குப் பிறகு நான் செக்ஸ் மற்றும் காமெடி காட்சிகள் மட்டுமே செய்ய முடியும், என்னால் ஆடைகளை குறைத்து தான் நடிக்க முடியும் என்றார்கள் .
எனக்கு மூக்கு சரியில்லை என்று சிலர் பட வாய்ப்புகளை தர மறுத்தனர், சிலர் மார்பகம் சிறியதாக இருப்பதாகவும் விமர்சித்துள்ளனர். இன்று இந்த பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. நான் மூன்று அல்லது நான்கு கிலோ எடை அதிகமாக இருந்ததால் நிறைய பட வாய்ப்புகளை இழந்துள்ளேன் என கூறியுள்ளார். பெண்களை கேலி செய்பவர்கள் அதை தங்கள் உரிமை என நினைக்கிறார்கள்.
இவ்வாறு நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.