விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் | 'பேடி' படத்தின் புதிய அப்டேட் | தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! |
நடிகர் அஜித் குமார் தனது 62வது படத்திற்காக தயாராகி வருகிறார். அவரின் நீண்ட நாள் கனவான பைக்கில் உலகமெங்கும் செல்ல பயிற்சியிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே இந்தியாவில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டார்.
இந்நிலையில் கிலாஸ்கோவில் இ ருந்து சென்னைக்கு 10 மாத கைக்குழந்தையுடன் தனியாக ஒரு பெண் பயணம் செய்துள்ளார். அந்த பெண்ணிற்கு அஜித் செய்த உதவி குறித்து அந்த பெண்ணின் கணவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். விமான நிலையத்தில் குழந்தையுடன் பொருட்களையும் தூக்கி வந்துள்ள அந்த பெண்ணிடம் எனக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த உணர்வு எனக்கும் புரியும் எனக்கூறி அவரே அந்த பொருட்களை தூக்கி உதவியுள்ளார். இது குறித்து அந்த பெண்ணின் கணவர் இன்ஸ்டாகிராமில் அஜித் குமாருடன் தன் மனைவி எடுத்த புகைப்படத்தோடு அஜித் குமாருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். இப்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.