எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா | சித்தா படத்திற்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை : சித்தார்த் | இரட்டை சகோதரிகள் கதாநாயகியாக வெற்றி | போதைக்கு எதிராக போராடும் சாலா | உறுப்பினர்கள் பற்றி அவதூறு பரப்பினால் நடவடிக்கை: தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை | ரஜினி 170 : புது ஹேர்ஸ்டைலில் ரஜினிகாந்த்… |
அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் தயாராகும் 'முசாசி'. பிரபுதேவா போலீஸாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடி கிடையாது. இவருடன் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, மலையாள நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், நடிகர் 'மாஸ்டர்' மகேந்திரன், 'பழைய ஜோக்' தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்ய, லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார்.
ஆக்சன் எண்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது. இதை அந்தோணி தாசன் பாடியிருக்கிறார். முதன்முறையாக பிரபுதேவா படத்தில் இவர் பாடுகிறார். இந்த பாடலுக்கு, நடன இயக்குநர் சாண்டி நடனம் அமைத்திருக்கிறார். வரும் கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.