''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
'பாகுபலி' படம் வெளிவந்த பிறகு தென்னிந்தியத் திரையுலகினரின் பார்வை சரித்திரப் படங்கள் பக்கம் கொஞ்சம் திரும்பியது. தற்போதைய கால கட்டப் படங்கள் இல்லாமல் 80களின் படங்கள், சுதந்திர காலப் படங்கள், சரித்திரப் படங்கள் என சீரான இடைவெளியில் வந்து கொண்டிருக்கிறது.
இந்த ஏப்ரல் மாதத்தில் வாரம் ஒரு சரித்திரப் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இன்று ஏப்ரல் 7ம் தேதி, சுதந்திர காலக் கதையுடன் 'ஆகஸ்ட் 16, 1947' படம் வெளியாகி உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வெளியாகி உள்ளது.
அடுத்த வாரம் ஏப்ரல் 14ம் தேதி சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' தெலுங்குப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. அதற்கடுத்த வாரம் ஏப்ரல் 21ம் தேதி ஏழாம் நூற்றாண்டை மையமாகக் கொண்ட சரித்திரப் படமான 'யாத்திசை' படம் வெளியாக உள்ளது. அதற்கும் அடுத்த வாரம் ஏப்ரல் 28ம் தேதி சோழர்களின் வரலாறை மையமாகக் கொண்ட சரித்திரப் படமான 'பொன்னியின் செல்வன் 2' படம் வருகிறது.
இந்த 2023ல் இப்படி அடுத்தடுத்த வாரங்களில் சரித்திரப் படங்கள் வெளிவருவது அதிசய நிகழ்வுதான்.