ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
இந்தியாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம், ஆஸ்கர் விருது வென்ற ஏஆர் ரகுமான், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்கள், நடிகைகள் என இருந்தும் 'பொன்னியின் செல்வன் 2' டிரைலரை சரியான விதத்தில் இன்னமும் கொண்டு போய் சேர்க்கவில்லை என தமிழ் சினிமா ரசிகர்கள் வருந்துகிறார்கள்.
அந்த டிரைலர் வெளியான ஒரு வாரத்திற்குப் பிறகே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் சேர்த்து யு டியூபில் 25 மில்லியனைக் கடந்தது. தற்போது வரையிலும் தமிழில் 11 மில்லியன் பார்வைகளையும், ஹிந்தியில் 13 மில்லியன் பார்வைகளையும் மட்டுமே கடந்துள்ளது.
அதே சமயம் அல்லு அர்ஜுன் நடித்து வரும் 'புஷ்பா 2' படத்திற்கான டிரைலரை நேற்று யு டியூபில் வெளியிட்டார்கள். அந்த டிரைலர் 24 மணி நேரத்திலேயே ஐந்து மொழிகளிலும் சேர்த்து 30 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் 25 மில்லியனைக் கடக்க ஒரு வாரத்தை எடுத்துக் கொண்டது.
'புஷ்பா 2' டிரைலர் தெலுங்கில் 17 மில்லியன் பார்வைகளையும், ஹிந்தியில் 19 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது. டிரைலர் வெளியாகி இன்னும் 24 மணி நேரம் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முடியும் போது இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம்.
'யாத்திசை' என்ற புதுமுகங்கள் நடித்த ஒரு சரித்திரப் பட டிரைலர் யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டே நாட்களில் 6 மில்லியனைத் தொட உள்ளது. அதனுடன் ஒப்பிடும் போது 'பொன்னியின் செல்வன் 2'க்கான வரவேற்பு குறைவாகவே உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
தெலுங்கு, கன்னட மொழிப் படங்கள் 1000 கோடி வசூலைக் கடந்த நிலையில், 'பொன்னியின் செல்வன் 2' படம் 1000 கோடி வசூலைக் கடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், படக்குழுவோ டிரைலர் வெளியிட்ட பின் வேறு எதையும் செய்யவில்லை. படம் வெளியாக இன்னும் 20 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த 20 நாட்களில் மற்ற மொழிகளில் படத்தை எப்படிக் கொண்டு போய் சேர்ப்பார்கள் என்பது மணிரத்னத்திற்கு மட்டுமே தெரியும்.