ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா |

தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்து பிப்ரவரி 17ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளிவந்த படம் 'வாத்தி'. தனுஷ் நடித்து தெலுங்கில் நேரடியாக வெளியான முதல் படம் இது.
தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலுமே இப்படம் 100 கோடி வசூலைக் கடந்து பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படத்தின் தியேட்டர் வசூல் ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில் இப்படத்தின் மொத்த வசூல் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளது.
தெலுங்கு மாநிலங்களில் 43 கோடியும், தமிழகத்தில் 42 கோடியும், கர்நாடகாவில் 8 கோடியும், கேரளாவில் 1 கோடியும், இதர மாநிலங்களில் 1 கோடியும், வெளிநாடுகளில் 25 கோடியும் வசூலித்து மொத்தமாக 120 கோடி வரை வசூலித்துள்ளதாம். இதில் ஷேர் தொகையாக மட்டுமே 63 கோடி வரை கிடைத்துள்ளது.
35 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடைபெற்ற இப்படம் 36 கோடி வசூலித்த பிறகுதான் லாபம் பார்க்க முடியும் என்ற கணக்கு இருந்தது. அதை மீறி ஷேர் தொகை 63 கோடி வந்ததால் இப்படம் சுமார் 27 கோடி வரை லாபத்தைக் கொடுத்துள்ளது. இதன் மூலம் தனுஷுக்கு தற்போது தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உருவாகி உள்ளது.




