இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

2023ம் ஆண்டில் வெளிவந்த படங்களில் ஏப்ரல் மாதம் வெளிவந்த சரித்திரப் படமான 'யாத்திசை' படம் ரசிகர்களின் கவனத்தையும், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்ற ஒரு படமாக அமைந்தது. சேர, சோழர்களை வென்ற பாண்டிய மன்னனின் கற்பனை வரலாற்றுப் படமாக இப்படத்தை இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கியிருந்தார். புதுமுகங்களை வைத்து அவர் இயக்கிய இப்படம் 'பொன்னியின் செல்வன் 2' படத்திற்கு முன்பாக வெளிவந்து ஆச்சரியப்படுத்தியது.
இயக்குனர் தரணி ராசேந்திரன் தனது அடுத்த படத்தை காஷ்மீர் பின்னணியில் படமாக்க உள்ளார். இது குறித்து, “யாத்திசையை தொடர்ந்து அடுத்த படத்திற்கான வேலையாக இடம் பார்க்க ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குநருடன் காஷ்மீர் வந்துள்ளேன். மிக பிரம்மாண்ட கதை களமாக இந்த படம் அமையும். மற்ற விவரங்கள் முதன்மை நடிகர்கள் மற்ற நடிகர்கள் தேர்வு, படப்பிடிப்பு,வெளியீடு குறித்து விரைவில் எழுதுகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.




