சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள 'சலார்' படம் மூன்று நாட்களில் 400 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளார்கள். தயாரிப்பு நிறுவனம் 400 கோடி வசூல் என அறிவித்தாலும் பாக்ஸ் ஆபீஸ் வசூலை வெளியிடும் டிராக்கர்கள், சில பாக்ஸ் ஆபீஸ் இணையதளங்கள் அந்தத் தொகையை விடவும் குறைவான தொகைதான் வசூலாகியுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவில் மட்டும் 250 கோடி வசூல், வெளிநாடுகளில் 150 கோடி வசூல் இருக்கலாம் என அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் மட்டுமே இப்படம் அதிக வரவேற்பைப் பெற்று அங்கு 150 கோடி வசூலைப் பெற்றுள்ளதாம். இதர தென்னிந்திய மாநிலங்களில் எதிர்பார்த்த அளவு படத்திற்கு வரவேற்பில்லை என்கிறார்கள். குறிப்பாக தமிழில் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி இருந்தாலும் 12 கோடி வரை மட்டுமே கடந்த மூன்று நாளில் வசூலித்துள்ளதாம்.
தமிழ் ரசிகர்களுக்கு 'கேஜிஎப் 2' படத்தைப் பிடித்த அளவிற்கு இந்த 'சலார்' படத்தைப் பிடிக்கவில்லை என தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.