நான் பத்தாம் வகுப்பு பெயில் - கத்ரீனா கைப் | சித்தார்த் கைவசம் 8 புதிய படங்கள் | ‛‛நாங்கள் பரம எதிரிகள் கிடையாது. ஆனால்...'': தனுஷ் பற்றி மனம்திறந்த நயன்தாரா | 5 மொழிகளில் வெளியாகும் அய்யப்பன் படம் | பிளாஷ்பேக் : மோகனை முழுமையான ஹீரோவாக்கிய 'கிளிஞ்சல்கள்' | சீரியல் நடிகை கீதாஞ்சலிக்கு ஆண் குழந்தை! குவியும் வாழ்த்துகள் | புஷ்பா 2 - தமிழகத்தில் 50 கோடி வசூல் | தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜுன் மனு | பிளாஷ்பேக் : அன்புள்ள ரஜினிகாந்த் | திரைப்பட கூட்டமைப்பின் துணை தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு |
'குட் நைட்' படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் மணிகண்டன் 'லவ்வர்' என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதனை அறிமுக இயக்குனர் பிரபு ராம் இயக்குகிறார். இதில் கவுரி ப்ரியா ரெட்டி, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சான் ரோல்டன் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ‛லவ்வர்' பட டீசர் உடன் இப்படம் 2024 பிப்ரவரி 14ந் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.