நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கேஜிஎப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் சலார். இந்த படம் மூன்று நாட்களில் 400 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்நிலையில் தற்போது சலார் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் சலார் படத்துக்கு எந்த அளவுக்கு பிரமாண்டமான செட் அமைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சிகளிலும் நடிகர்- நடிகைகள் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார்கள் என்பதை பார்க்க முடிகிறது. இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சலார் படத்தின் முதல் பாகத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருவதால் இரண்டாம் பாகத்தையும் இதேபோன்று பிரமாண்டமாக இயக்க பிரசாந்த் நீல் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.