'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கவர்ச்சி நடிகையாக மட்டுமே பார்க்கப்பட்ட நடிகை ஷகீலாவை சக மனுஷியாக பார்க்க வைத்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. அந்நிகழ்ச்சிக்கு பிறகு ஷகீலா கனிவான இதயமும் கொண்டவர் என்பதை புரிந்து கொண்ட பலரும் அவருக்கு ரசிகர்களாகிவிட்டனர். சில யூ-டியூப் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் வலம் வரும் ஷகீலா, சில சமூக பிரச்னைகள் குறித்தும் பேசி வருகிறார். அவர் அண்மையில் தனது ஏரியாவில் நடந்த பிரச்னைக்காக வீதியில் இறங்கி போராடியுள்ளார்.
தனது ஏரியாவில் உள்ள ஒரு குடியிருப்பில் குடும்பமாக வசித்து வருபவர்களுக்கு ரூ.2500, பேச்சிலர்ஸ்களுக்கு ரூ.9000 என பராமரிப்பு செலவாக வசூலித்து வந்தனர். அந்த தொகை செலுத்தப்படாத காரணத்தால் 40க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கு தண்ணீர் இணைப்பை துண்டித்துள்ளனர். இதன்காரணமாக அந்த குடியிருப்பில் வசித்து வந்த பேச்சிலர்ஸ் உட்பட பலரும் வீதியில் போராடியுள்ளனர். இதுகுறித்து அறிந்த ஷகீலா இரவு நடந்து அந்த போரட்டத்தில் பேச்சிலர்ஸ்க்கு ஆதரவாக களமிறங்கி போரடியுள்ளார். தனக்கு சற்றும் தொடர்பில்லாத விவகாரத்தில் தன்னலமற்று மக்களுக்காக போரடிய ஷகீலாவின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.