சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி ஆகியோர் 'குட்லக் ஸ்டூடியோஸ்' என்ற புதிய ஸ்டூடியோ ஒன்றை துவக்கியுள்ளனர். திரைத்துறை பணிகளான ரெக்கார்டிங், டப்பிங், எடிட்டிங் பணிகளை நவீன வசதிகளுடன் கூடிய இந்த ஸ்டூடியோவை நடிகர் சூர்யா, தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, மனோ தங்கராஜ், இயக்குனர் ஹரியின் தந்தை கோபாலகிருஷ்ணன், மாமனார் நடிகர் விஜயகுமார், உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
40 வருட பாரம்பரியமான நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான ‛குட்லக் ப்ரிவியுவ்' திரையரங்கம் தான் இப்போது குட்லக் ஸ்டூடியோஸ் ஆக சாலிகிராமத்தில் உதயமாகியுள்ளது.




