சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. கதாநாயகியாக சித்தி இத்னானி நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் சையமைக்கிறார் . ட்ரம்ஸ்டிக் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். முத்தையாவின் வழக்கமான கிராத்து கதையில் இந்தப்படம் உருவாகி உள்ளது. ஆர்யா பக்கா கிராமத்து இளைஞராக நடித்துள்ளார்.
நேற்று இந்த படத்தின் டீசரை இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி துவங்கும்போது வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள தனியார் விளையாட்டு சேனலின் ஸ்டுடியோவில் இந்த டீசர் வெளியிடப்பட்டது. இதில் ஆர்யா கலந்து கொண்டு சிறப்பித்தார். அவருடன் போட்டியை தொகுத்து வழங்கும் நடிகரும், வர்ணனையாளருமான ஆர்ஜே பாலாஜி, கிரிக்கெட் வீரர்கள் பாலாஜி, பத்ரிநாத் மற்றும் முரளி விஜய் ஆகியோரும் பங்கேற்று டீசரை ஜாலியாக வெளியிட்டனர்.