'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் | பிளாஷ்பேக்: திரைப் பிரபலங்களின் மாற்றத்திற்கு காரணியாய் இருந்த “ஸ்ரீமுருகன்” | ரசிகர் கொலை வழக்கில் நவ-6ல் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை | கேரள மாநில திரைப்பட அகாடமி தலைவராக ரசூல் பூக்குட்டி தேர்வு | லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி |

தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் கைதி. தற்போது இந்த படம் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் போலா என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு, நாளை (மார்ச் 30) வழியாக இருக்கிறது. இந்த படத்தை தானே இயக்கியும் உள்ள அஜய் தேவ்கன். படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த நரேன் கதாபாத்திரத்தை பெண்ணாக மாற்றி அதில் தனது ஆஸ்தான நடிகை தபுவை நடிக்க வைத்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்கிற சஸ்பென்ஸ் உடைந்துள்ளது. இந்த படத்தின் ஒரிஜினலான கைதியில் கிளைமாக்ஸில் மட்டும் என்ட்ரி கொடுக்கும் ஹரிஷ் உத்தமனின் கதாபாத்திரத்தில் தான் அபிஷேக் பசான் நடித்துள்ளார். அதிலும் ஒரு கை இழந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அபிஷேக் பச்சன். கிளைமாக்ஸில் அஜய் தேவ்கனை பார்த்து பழிவாங்குவதாக சபதம் எடுக்கிறார் என்று இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுப்பதாக இந்த காட்சியை உருவாக்கி உள்ளார்கள் என்று சமீபத்திய ஹிந்தி பத்திரிகையாளர் காட்சியில் படத்தைப் பார்த்தவர்கள் தகவலை வெளியிட்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக சில படங்களில் இணைந்து நடித்துள்ள அஜய் தேவ்கனும் அபிஷேக் பச்சனும் கடைசியாக 2012ல் போல் பச்சன் என்கிற படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




